Monday, July 20, 2009

அழுக்கு சமுதாயம்


அந்திவானம் மொதுவாக
அழுதுகொண்டிருந்தது!

இரண்டு கம்புகளின் நடுவே
இணைக்கப்பட்ட
கயிற்றின் மேல்
சின்ன மலர் ஒன்று
சித்திரம் வரைந்து கொண்டிருந்தது!

சயிக்கிள் வளையத்துள்
சாகசச் சரித்திரம்
செய்து கொண்டிருந்தது.

கயிற்றின் கீழ் தாய்
தாளத்தோடு,,
கயிற்றின் மேல் மகள்
சோகத்தோடு,,,,,
வயலின் வரப்பைப்போல
நடுவில் வறுமைக்கோடு,,,,
கூட்டம்
கூடி நின்று
ஆட்டம் பார்த்தது

அவ்வப்போது
விரித்திருந்த துண்டில்
விழுந்தன
சில
சில்லறைக் காசுகள்.

கயிற்றில் இருந்து
இறங்கி
கூட்டத்தை நோக்கி
வாட்டத்தோடு
தட்டை நீட்டினாள்
ந்த பிஞ்சு மலர்.

கூடி நின்ற கூட்டத்தில்
பல கால்கள்
பின்னோக்கிச் சென்றன
கைதட்டி ரசித்த
கூட்டம்
கைவிட்டுப் போவதை
அவளால் தாங்கமுடியவில்லை

திடிரென்று
கூட்டத்தின் நடுவில்
ஒருவன் நுழைந்தான்
எச்சில் சோற்றோடு,,,
பழைய தட்டோடு....

நிமிர்ந்து பார்த்தான்
சிறுமியின் தட்டு
சில்லறையின்றி
சிரித்தது

தயக்கம் ஏதும் இன்றி
தன் தட்டைப்
பார்த்தான்
எச்சில் சோறும்
ஏழெட்டு ரூபாயும்
இருந்தது...
ஏழெட்டு சில்லறையயும்
ஏழைச் சிறுமியின்
தட்டில்,,
போட்டுவிட்டு அந்த
பிச்சைக்காரன்
அழகாய் சிரித்தவாறு
அங்கிருந்து நகர்ந்தான்.

அவன் சிரிப்பில்
ஆயிரம்
அர்த்தங்கள்
தெரிந்தன என்பதெல்லாம் பொய்!
ஒரே ஒரு
அர்த்தம் தெரிந்தது
"இந்த அழுக்கு சமுதாயம்
எப்போது அழகாகப் போகிறது"

Saturday, July 11, 2009

இயற்கை


கண்மூடித்தூங்கும் போது அன்னையாகிறாய்

கவிதைகள் எழுதும் போது காதலியாகிறாய்

தவறுகள் தொடுக்கும் போது ஆசனாகின்றாய்

உன்னுள் எத்தனை குழந்தைகள்?

அருவிகளாய்ச் சுமக்கின்றாய்

பசுமையைச் சுமக்கின்றாய்

வனவிலங்குகளைச் சுமக்கின்றாய்

நீயும் ஒரு சுமைதாங்கி !

எத்தனை விஞ்ஞானம் வளர்ந்தாலும்

காலத்தால் அழியாதது கவிசுவடுகள்

இன்றோ காவியச் சுடுகாடுகள்

அத்தனைக்கும் யார் காரணம் ? நான் (மனிதன்)

உன்னை அளிக்கும் நோக்கத்தில் என்னை

அழித்துக் கொள்கின்றேன். ஆருயிரே

அன்பெனும் கேள்வியை நடத்தி பசுமை என்னும்

வரம் தருவாயாக? அல்லது சாபம் தருவாயா?

நாங்கள் விரும்புவது சுந்தரவனக்காடுகள்

சுடுகாடுகள் அல்ல.

நிலவில்லாமல் இரவில் ஒளி இல்லை

நீ ! இல்லாமல் மனித வாழ்வில் ஒளி இல்லை

உன்னுள் அமைதியாய் இருக்கும்போது

ஆடும் மயிலாய் அமைதியாய் மெருகூட்டுகிறாய்

அளிக்கும்போது எரிமலையாய்

விரிசலாய் படமெடுக்கிறாய்

மனிதன் வளர்ந்தது உன்னுள்

மானுடம் வளர்ந்தது உன்னுள்

நாகரிகம் வளர்ந்தது உன்னுள்

ஒவ்வொரு அணுவிலும் உள்ள உன்னை

என் அன்னையாகக் கருதுவதில் தவறில்லை

கறிமேடாய் ஆகின்ற உன்னை காவியச் சுவடுகளாக

மாற்ற இதோ வருகிறது

இன்னொரு மானுடம்.

Thursday, July 9, 2009

மனிதசக்தியின் மகத்துவம்


கூரையினைப் பார்த்துக்கொண்டு
முலையில் முடங்கிக் கொண்டு
நாளைக்காக காத்துக்கொண்டு
முறையான வாழ்வினை முடக்கிவிட்டு
தெளிவான வாழ்வினை தொலைத்துவிட்டு
தரங்கெட்டு, நன்மதிப்பு கெட்டு வாழும் - இந்த
மனித சமுகமே இன்னுமா உன்னுள் உறங்கிக்கிடக்கும்
"மனித சக்தியை " அறியவில்லை !
ஒருவேளை உணவிற்காக அடிமைப்பட்டு
உனது தன்மானத்தை விட்டெறிந்து
காசை நினைத்து காலம் தள்ளும் மானிடனே
உன்சக்தியினை நீ அறியவில்லையா
போதைக்கு அடிமைப்பட்டு
தன்னம்பிக்கையினைவிட்டு
நல்வாழ்விற்கு பூட்டு போட்டு வாழும் மானிடனே
ஜாதி,மதத்திற்கு உயிரை விட்டது போதும்
ஜிந்தறிவு ஜிவிகளிடமிருந்து உன்னை
வேறுபடுத்திக்கோள்
விண்ணைத் தொட்ட இந்த மனித சக்தி
மண்ணைவிட்டு நீங்குவதில்லை
நாள்தோறும் சவிற்காக நாளேட்டை பார்த்த
நோயாளிக்கு நுறுவயது தருமிந்த "மனிதசக்தி"
தனக்காக வாழாது, பிறருக்கென வாழ்ந்து
பிறர் நலத்தின தன்னலமாக கருதிய
அன்னை தெரசாவின் "கருனைசக்தி"
இதுபிரபஞ்சத்தினை மிஞ்சும் "மகா சக்தி"

Monday, July 6, 2009

வறுமையின் வளமை

ஓலைக்குடிசை
வளைந்து நிற்கிறது
ஓட்டைகளோடு
வயி்ற்று சோறு
ஒருவேளை
அதுவும் சிலவேளை
எப்போதாவது
விளக்கின் வெளிச்சம்
விதியில் தெரியும்!
வறுமை வளமாக வாழ்கின்றது
இங்கே!
மழைத்துளிகள் வெளியில் இருந்து
உள்ளே செல்ல
கண்ணிர் துளி உள்ளே இருந்து
வெளியே வந்து போகின்றது!
இந்த பூமி மேட்டின்
மேல் வறுமையின்
பாட்டு கேட்டுக்கொண்டே
இருகின்றது
ஆண்டாண்டுகாலமாக!

Friday, July 3, 2009

இது சத்தியம்


குழந்தைகள் மேல்
குண்டுமழை
புதியதொரு
வெள்ளப்பெருக்கு.
சிதைத்தவைகள்
உடல்கள் மட்டும் அல்ல
நாளைய கனவுகளும்
நாளைய சிந்தனைகளும்
கொஞ்சி பேசும்
பிஞ்சு உள்ளங்கள்
நஞ்சு வெள்ளத்தில்
ஒ! பாதகர்களே
சிறகுகளை ஓடித்தீர்கள்
உறவுகளை உடைத்தீர்கள்!!
இப்போது
சிறுவர்களையும்
சிதைக்கிறீகிர்கள்
இன்னும் என்னென்ன
செய்ய இருக்கிறீர்கள்!
கவனமாக இருங்கள்
கல்லறைகள் எல்லாம்,,
இந்த ஈழத்தில்
ஒருநாள் கண்விழிக்கும்!
அன்று
உங்கள் ஆட்டமெல்லாம்
அடங்கிப்போகும்
இது சத்தியம்!
இதுவே சாத்தியம்!!

Wednesday, July 1, 2009

ஏன் இந்த மாற்றம்


குளிர்கின்ற தென்றலும்
அனல் காற்றாய் ஆனது
மனம் வீசும் மலர்களும்,
வசனையற்றுப் போனது.
சுழல்கின்ற உலகமும்
தள்ளாடத் தொடங்கியது
காரணம் கண்டன கட்சிகளாக
பூமியில் ஏழைகளின் கண்ணிர்
அதனால் நாடே சீர்கெட்டுப் போனது
கொட்டுகின்றான் பணத்தை கோவிலில்
குறைகள் நீங்குமென்று!
பக்கத்து வீட்டுப் பச்சிளன்குழந்தை
பாலுக்கு அழுவதைக் கண்டும்,
வழுக்கி விழுந்த வயதானவரை
படிதாண்டிப் போகிறான்
தூக்கிவிட்டால் தொற்றிவிடுமாம்
பட்டகைகளில் நோய் என்று!
தமிழ் இளைஞர்களை ஈழத்தில்
கிடங்கு தோண்டி பெட்ரோல் உற்றி,
உயிரோடு கொளுத்துகின்றனர்
அவலக் குரல் அடங்கும்வரை!
ஆறறிவு படைத்த மனிதனே
ஜந்தறிவை மட்டும் பயன்படுத்துவதேன்?
தீமைகள் விட்டுவிடு தீர்வுகளை எடுக்க்விடு
மனிதநேயம் வளர்த்துக்கொள்
மனிதனாக மாறிவிடு..